ரம்ஜான் நோன்பு தொடங்கியது

பொள்ளாச்சி, வால்பாறையில் ரம்ஜான் நோன்பு தொடங்கியது;

Update:2023-03-25 00:15 IST

வால்பாறை, 

ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் 22-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று முதல் ரம்ஜான் நோன்பு தொடங்கி உள்ளது. வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் ஜமாஅத் பெரிய பள்ளிவாசலில் நேற்று சிறப்பு தொழுகை நடந்தது. தொடர்ந்து முஸ்லிம்கள் 30 நாட்கள் ரம்ஜான் நோன்பை தொடங்கினர். ரம்ஜான் நோன்பு நாட்களில் தினமும் இரவில் சிறப்பு தொழுகை மற்றும் மதசொற்பொழிவு நடைபெற உள்ளது. அதேபோல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மதியம் சிறப்பு தொழுகை நடக்கிறது. மேலும் இப்தார் நோன்பு திறப்பு நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு தொழுகையுடன் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு, அனைத்து மக்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதேபோல் சோலையாறு நகர், உருளிக்கல், சோலையாறு எஸ்டேட், சிங்கோனா, முடீஸ் பகுதியில் உள்ள பள்ளிவாசல்களிலும் ரம்ஜான் நோன்பு தொடங்கியதையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். இதேபோல் பொள்ளாச்சி பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையுடன் ரம்ஜான் நோன்பு தொடங்கியது. 

Tags:    

மேலும் செய்திகள்