மீனாவை சந்தித்த ரம்பா

சமீபத்தில் மீனாவின் கணவர் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு நடிகை ரம்பா சந்தித்து ஆறுதல் கூறினார்.;

Update:2022-08-10 14:18 IST

தமிழ் திரை உலகில் 1990-களில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ரம்பா தொழில் அதிபரை மணந்து கனடாவில் குடியேறினார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் குடும்பத்துடன் சென்னை திரும்பிய ரம்பா தனது சம காலத்து நடிகைகளையும், தோழிகளையும் நேரில் போய் பார்த்து நலம் விசாரித்தார். நடிகை குஷ்புவையும், அவரது மகள்களையும் சந்தித்து பேசினார். நடிகை சினேகா வீட்டுக்கு சென்றார். அங்கு நடந்த வரலட்சுமி பூஜையில் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நடிகை மீனாவையும் ரம்பா சந்தித்தார். சமீபத்தில் மீனாவின் கணவர் மரணம் அடைந்த நிலையில் அவருக்கு ரம்பா ஆறுதல் கூறினார். அப்போது நடிகைகள் சங்கவி, சங்கீதா ஆகியோரும் உடன் இருந்தனர். ரம்பா தன்னை சந்தித்த புகைப்படத்தை மீனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்