ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்பு
ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் மீட்க்கப்பட்டது.;
அரவக்குறிச்சி அருகே கொடையூர் ஊராட்சி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள 32 அரசு நத்தம் நிலத்தில் தனியார் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இது பற்றி தகவல் அறிந்த அரவக்குறிச்சி தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தை அளவை செய்து அந்த இடத்தில் அளவை கற்கள் நடப்பட்டன. பின்பு இந்த இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என்றும், யாரும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என்றும், அப்படி ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டது.