பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி
மழையால் வீடுகள் இடிந்து சேதம்:பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி ஒன்றியக்குழு தலைவர் வழங்கினார்;
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் கங்காதரபுரம் ஊராட்சி ஆட்டூர் கிராமம் வடக்கு தெருவில் உள்ள அஞ்சான், அமராவதி ஆகியோரின் வீடுகள் தற்போது பெய்து வரும் மழையில் இடிந்து விழுந்தது. தகவல் அறிந்த குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் எழுமகளூர் ஏ.ஆர்.ராஜா ஆகியோர் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகளை வழங்கினர். அப்போது கங்காதரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா பாஸ்கரன் மற்றும் ஊராட்சி நிர்வாகிகள், தி.மு.க. பொறுப்பாளர்கள் உடன் இருந்தனர்.