போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றம்

சிவகாசியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.;

Update:2022-07-27 00:30 IST

சிவகாசி,

சிவகாசி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்புகள் இருந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சிவகாசி மாநகராட்சிக்கு புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாநகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் மற்றும் அலுவலர்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று எந்திரத்தின் உதவியுடன் அந்த பகுதியில் இருந்த 3 கடைகளை அகற்றினர். மாநகராட்சி அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்