சாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சாத்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-05-04 19:05 GMT

சாத்தூர், 

சாத்தூர் மெயின் ரோட்டின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகள் நிறைந்து இருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆதலால் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதன்படி நேற்று சாத்தூர் மெயின் ரோட்டில் நகர் பகுதி எல்லையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதில் சாலை ஓரத்தில் உள்ளவர்கள் சிலர் தாமாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர். ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாத இடங்களில் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் நகராட்சியினர் குறியிடப்பட்ட அளவு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியர் ராஜாமணி, சாத்தூர் நகர் நில அளவையர் காளீஸ்வரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்