ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கீழமாத்தூர் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன;

Update:2022-05-24 23:24 IST

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே கீழமாத்தூர் ஊராட்சியில், அப்பர் கோவிலுக்கு செல்லும் சாலை ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது. இதனால், கிராமமக்கள் மற்றும் பக்தர்கள் இந்த சாலை வழியாக கோவிலுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். மேலும், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதன்பேரில், கீழமாத்தூர் ஊராட்சி தலைவர் கலைவாணி அமல்ராஜ் மேற்பார்வையில், பொக்லின் எந்திரம் மூலம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்