ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார கூட்டமைப்பு தலைவர் தியாகராஜன், செயலாளர் கணேசன், துணைத் தலைவர் கல்லை ஜிந்தா மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சேர்ந்த வக்கீல் முருகன், துளசி சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, ஒப்பந்ததாரர் லட்சுமணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
ஏற்கனவே ஸ்டெர்லைட் நிறுவனத்தால் காற்று மாசு ஏற்படவில்லை என்பதை அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது. அதேபோன்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி காற்று மாசுபாட்டிற்கும், புற்று நோய்க்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஆகையால் பொய் குற்றச்சாட்டுகளால் ஆலை மூடப்பட்டு உள்ளது. இதனால் தொழில்வளம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.