ரூ.1¼ கோடிக்கு தானியங்கள் விற்பனை

அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1¼ கோடிக்கு தானியங்கள் விற்பனையானது.

Update: 2023-03-02 18:45 GMT

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு நேற்று விவசாயிகள் விற்பனைக்காக அதிக அளவில் நெல், மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட விளை பொருட்களை கொண்டு சென்றனர். இதனை வியாபாரிகள் போட்டி போட்டு கொள்முதல் செய்தனர். இதில் ஒரு மூட்டை நெல் குறைந்தபட்சமாக ரூ.1,090-க்கும், அதிகபட்சமாக ரூ.1,934-க்கும் விற்பனையானது. ஒரு மூட்டை மணிலா குறைந்தபட்சமாக ரூ.7419-க்கும் அதிகபட்சமாக ரூ. 8,749-க்கும், உளுந்து குறைந்தபட்சமாக ரூ.6,800-க்கும், அதிகபட்சமாக ரூ.7247-க்கும், எள் குறைந்த பட்சமாக ரூ.11189-க்கும், அதிகபட்சமாக ரூ.1,2849-க்கும் பச்சை பயிர் குறைந்தபட்சமாக ரூ.6600-க்கும், அதிகபட்சமாக ரூ.7269-க்கும், நாட்டுக்கம்பு குறைந்தபட்சமாக ரூ. 7196-க்கும், அதிகபட்சமாக ரூ.7280-க்கும், கேழ்வரகு குறைந்தபட்சமாக ரூ.2987-க்கும் அதிகபட்சமாக 3,157-க்கும், மக்காச்சோளம் குறைந்த பட்சமாக ரூ.2000-க்கும், அதிகபட்சமாக ரூ. 2220-க்கும், பனிப்பயிர் குறைந்தபட்சமாக ரூ.6689-க்கும், அதிகபட்சமாக ரூ.8889-க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் 293 மெட்ரிக் டன் தானியங்கள் வந்தது. இதில் மணிலா மட்டும் 300 மூட்டைகள் விற்பனைக்கு வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம் ரூ.1 கோடியே 27 லட்சத்துக்கு தானியங்கள் விற்பனையானது. இந்த தகவலை கண்காணிப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்