மணல் திருட்டு; 2 பேர் மீது வழக்கு

மணல் திருட்டு தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது;

Update:2023-06-25 00:15 IST

இளையான்குடி, 

இளையான்குடி அருகே உள்ள சீராத்தங்குடி கிராமம் நாட்டார் கால்வாயில் மணல் திருடப்படுவதாக உத்தமனூர் வருவாய் குரூப் கிராம நிர்வாக அலுவலர் சித்திரை செல்வனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர் மற்றும் கிராம உதவியாளர் அங்கு ரோந்து சென்றனர். அப்போது அங்கு மணல் திருடிக் கொண்டிருந்த சிலர் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து மணல் கடத்த பயன்படுத்திய டிப்பர் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து இளையான்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் வழக்குப்பதிவு செய்து மேலாயூர் கிராமத்தை சேர்ந்த அஜித்(வயது 25), மதிவாணன்(42) ஆகியோரை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்