நாட்டுமட மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்

வேதாரண்யம் நாட்டுமட மாரியம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம்;

Update:2023-10-07 00:15 IST

வேதாரண்யம்:

வேதாரண்யம் நாட்டுமட மாரியம்மன் கோவிலில் புரட்டாசி பெருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 6-ம் நாள் திருவிழாவில் மூலவர் அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து காம தேனு வாகனத்தில் பரிவார தேவதைகளுடன் அம்மன் கோவிலை சுற்றி வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்