கோவையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவையில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்;

Update:2023-03-03 00:15 IST


கோவை

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் எங்கள் வேலை எங்களுக்கு.... ஊதியம் எங்களுக்கு என்பதை வலியுறுத்தி கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. சங்க செயலாளர் என்.செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கோவை மாநகராட்சியில் 6000-க்கும் மேற்பட்டோர் தூய்மை பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

அதில் 3,200 பேர் தற்காலிக ஒப்பந்த பணியாளர்களாக உள்ளனர். இந்தநிலையில் மாநகராட்சியில் உள்ள தூய்மை பணியை தனியாருக்கு டெண்டர் விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதனால் தற்காலிக பணியாளர்களின் வேலை பறிபோகும் நிலை உள்ளது. ஆகவே இதனை கைவிட வேண்டும். எங்கள் வேலை எங்களுக்குரியது என்று வலியுறுத்தினர.

ஆர்ப்பாட்டத்தில் கோயமுத்தூர் லேபர் யூனியன் பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன், பொதுப்பணியாளர் சங்கம் பொதுச் செயலாளர் செல்வம், தமிழ்நாடு நம்மவர் தூய்மை பணியாளர் தொழிற்சங்க பேரவை செயலாளர் பி.எஸ்.மணிகொடி, கோவை மாவட்ட டாக்டர் அம்பேத்கர் மக்கள் துப்புரவு மற்றும் பணியாளர் சங்கம் பொதுச் செயலாளர் ஏ.சி. ஆறுமுகம் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் செய்திகள்