வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்தநாள் விழா

Update:2022-10-21 00:15 IST

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே வேமன்காட்டுவலசு அரசு உயர்நிலைப்பள்ளியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விடியல் ஆரம்பம் அமைப்பின் தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இதையடுத்து நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு வினாடி- வினா, கவிதை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி, ஆசிரியர்கள் குமார், இசை பயிற்சி ஆசிரியர் மணி கிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்