தமிழர்கள் வாழ்வில் நலமும் வளமும் பெருகட்டும்: விஜய் பொங்கல் வாழ்த்து

உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும் என்று விஜய் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-15 08:17 IST

சென்னை,

உழவர்களின் பண்டிகையாகவும், தமிழர் திருநாளாகவும் அறியப்படும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 1-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஜனவரி 16ம் தேதியான நாளை மாட்டு பொங்கலும், ஜனவரி 17ம் தேதி சனிக்கிழமை காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுப்பானையில் பொங்கலிட்டு மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.அனைவருக்கும் வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்