சமையல் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு

சமையல் மாஸ்டருக்கு அரிவாள் வெட்டு;

Update:2023-05-14 00:15 IST

திருப்புவனம்

பூவந்தி போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது பி.வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுவாமிநாதன் (வயது 40). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் இருசக்கர வாகனத்தில் சித்தாலங்குடி அருகே செல்லும்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் லிப்ட் கேட்டனர். பின்பு செல்போனை கேட்டு மிரட்டினர். அவர் தர மறுக்கவே அரிவாளால் இரண்டு கைகளிலும் தாக்கியும், கொலை மிரட்டல் விடுத்தனர். இச்சம்பவம் குறித்து சுவாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்