புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது

புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.;

Update:2022-08-10 00:30 IST

பெரம்பலூரை அடுத்த க.எறையூர் அருகே பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மருவத்தூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது விற்பனைக்காக கொண்டு சென்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரத்து 400 ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக ராயல் நகரை சேர்ந்த ராஜா (வயது 40), ரஞ்சித்குமார் (37) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்