கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-01-12 19:45 GMT

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.பர்கூர்:-

கிருஷ்ணகிரி கனிம வள துறை உதவி இயக்குனர் பொன்னுமணி மற்றும் அதிகாரிகள் பர்கூர் அருகே ஜெகதேவி சாலையில் ரோந்து சென்றனர். அந்த பகுதியில் நின்ற லாரியை சோதனை செய்த போது அதில் 28 டன் அளவுக்கு கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அந்த கற்கள் ஆந்திர மாநிலம் குப்பத்தில் இருந்து ஜெகதேவிக்கு கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரி பொன்னுமணி கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் கிரானைட் கற்களையும், லாரியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்