#லைவ் அப்டேட்ஸ்: அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம்; தொடரும் சமரச முயற்சி..?!

Update: 2022-06-19 03:34 GMT
Live Updates - Page 2
2022-06-19 06:38 GMT


சென்னையில் அதிமுக நிர்வாகிகள் உடன் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தனித்தனியே தீவிர ஆலோசனை

* ஒற்றை தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக நிர்வாகிகள் இருவரிடமும் மாறி மாறி ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

2022-06-19 06:36 GMT


அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என பல்வேறு தரப்பு நிர்வாகிகள் விருப்பம்: இது காலத்தின் கட்டாயம் - அதிமுக முன்னாள் எம்.பி., ப.குமார்

* மேலும் அதிமுகவில் தகுதியானவர்களை தட்டிக் கொடுக்க வேண்டும் என்றும், செயல்படாத நிர்வாகிகளை வெளியேற்ற வேண்டும் என்ரும் ப.குமார் தெரிவித்துள்ளார்.

2022-06-19 06:25 GMT


எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தம்பிதுரை வருகை தந்துள்ளார். முன்னதாக ஒ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனையில் ஈடுபட்டநிலையில் தற்போது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வருகின்றனர்.

இதனிடையே எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் சி.வி.சண்முகம். எம்.சி சம்பத், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022-06-19 05:57 GMT


எடப்பாடி பழனிசாமி ஒற்றைத் தலைமை பொறுப்பை ஏற்க அதிமுக இளைஞரணி ஆதரவு - முன்னாள் அமைச்சர் சிவபதி

* எம்.ஜி.ஆர். அணி நிர்வாகிகளும், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தலைமை பொறுப்பை ஏற்க வலியுறுத்தியுள்ளோம் என்று சிவபதி தெரிவித்துள்ளார்.

2022-06-19 05:49 GMT


ஒ.பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வருகை தந்துள்ளார்.

முன்னதாக எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனையில் ஈடுபட்டநிலையில் தற்போது ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து வருகிறார்.

2022-06-19 05:28 GMT


தொடர்ச்சியாக கடந்த 5 நாட்களாக ஆலோசனை நடைபெற்று வரும் நிலையில், இன்று ஆறாவது நாளில் ஒற்றை தலைமை பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒ.பன்னீர்செல்வத்துடன், எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தற்போது ஒ.பன்னீர்செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தளவாய் சுந்தரம், பொள்ளாச்சி ஜெயராமன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வருகை தந்துள்ளனர். அங்கு தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இதனிடையே தேனி மாவட்டப்பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2022-06-19 05:08 GMT


சென்னையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் உடன் அதிமுக எம்.பி. தம்பிதுரை சந்திப்பு

* எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

2022-06-19 04:45 GMT


சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு அதிமுக மாநில மற்றும் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் வருகை தந்தனர்.

*அதிமுக எம்.பி. தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்