இறந்தவர் அடையாளம் தெரிந்தது.

இறந்தவர் அடையாளம் தெரிந்தது;

Update:2023-06-11 00:15 IST

சத்திரக்குடி, 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கவிதை குடி கண்மாயில் ஆண் ஒருவரின் மண்டை ஓடு, தொடை எலும்பு மற்றும் சட்டை, அவரது செல்போன் கிடந்தது. இதுகுறித்து அறிந்த சத்திரக்குடி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் எலும்பு கூடுகளை கைப்பற்றி தடயவியல் நிபுணர்களுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இறந்தவர் அடையாளம் தெரிந்தது. அதில் பெரிய கையகம் ஊரை சேர்ந்த அழகர்சாமி (வயது 34) என்பதும், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். அழகர்சாமி தீயனூரில் அவரது சின்னம்மா வீட்டில் வசித்து, அங்கு இருந்து டைல்ஸ் வேலைக்கு சென்று வந்துள்ளார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக அவர் தற்கொலை செய்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் இது கொலையா? தற்கொலையா? என்பது தடயவியல் நிபுணர்களின் அறிக்கை வந்த பிறகுதான் தெரியும் என போலீசார் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்