மூதாட்டி முகத்தில் மிளகாய் பொடி தூவி 2 பவுன் செயின் பறிப்பு
மூதாட்டியிடம் செயின் பறித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி,
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காட்டூர் ராமநாதபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வேலு உடையாரின் மனைவி சின்னபொன்னு (வயது 85). இவர் நேற்று தனது வீட்டில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், திடீரென சின்னபொன்னுவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினார்.
மேலும் அவருடைய கழுத்தில் இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை, அந்த நபர் பறித்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் லால்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.