ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி

பேரண்டபள்ளி ஊராட்சியில் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீடு திட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update:2023-02-27 00:15 IST

ஓசூர்

சூளகிரி ஒன்றியம் பேரண்டபள்ளி ஊராட்சியில் பயனாளிகளுக்கு, தமிழக முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஊராட்சி தலைவர் மஞ்சுளா கிருஷ்ணப்பா தலைமை தாங்கி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். இதில் துணைத்தலைவர் நஞ்சப்பா, வார்டு உறுப்பினர்கள் தேன்மொழி சங்கர், முகமது அலி, ஊராட்சி செயலர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது 100-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்