வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு

பாப்பிரெட்டிப்பட்டியில் வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update:2022-07-05 22:10 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகர் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கருணாகரன். இவரது வீட்டுக்குள் நேற்று பாம்பு ஒன்று புகுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சமையல் அறையில் பதுங்கி இருந்த 5 அடி நீள சாரை பாம்பை பிடித்து சேர்வராயன் மலையில் விட்டனர். வீட்டுக்குள் பாம்பு புகுந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்