கடலூரில் சமூக ஆர்வலர் மீது துப்பாக்கிச்சூடு

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.;

Update:2023-09-08 20:35 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் மணவாளநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் இளையராஜா என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளையராஜா வள்ளலார் குடில் என்ற பெயரில் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று மாலை இளையராஜா தனது வயலுக்கு காரில் சென்ற போது, 6 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார். முன்விரோதம் காரணமாக அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதுகில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில், படுகாயம் அடைந்த இளையராஜா விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்