மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு

மூலை அனுமார் கோவிலில் சிறப்பு வழிபாடு

Update: 2022-08-27 20:20 GMT

தஞ்சை மேலவீதியில் உள்ள மூலைஅனுமார் கோவிலில் ஆவணி அமாவாசை சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் லட்ச ராமநாம ஜெபம் நடைபெற்றது. பின்னர் வறுமை மற்றும் கடன் தொல்லைகள் நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடந்தது.

மாலையில் பருவமழை பெய்து பயிர் வளங்கள் செழித்து வளர வேண்டி மூலை அனுமாருக்கு பல்வேறு காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள்18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், மூலைஅனுமாருக்கு 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலை சாற்றி தீபாராதனையும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் அமாவாசை வழிபாட்டுக்குழுவினர் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்