பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-07-09 19:00 GMT

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி வருகிற 12-ந் தேதி நடக்கிறது.

பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்ட அளவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி வருகிற 12-ந் தேதி (புதன்கிழமை) நடத்தப்பட உள்ளது. போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், தமிழ் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின் எழுதுகோல் என்ற தலைப்பில் பேச்சு போட்டியும் நடத்தப்படுகிறது.

பரிந்துரை கடிதம்

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படும்.

இந்த போட்டி வருகிற 12-ந் தேதி காலை 9.30 மணிக்கு நெல்லை டவுன் அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து (ஆர்ச் அருகே) நடக்கிறது. போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து பரிந்துரை கடிதம் பெற்றுவர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462- 2502521 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை தமிழ்வளர்ச்சி துணை இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்