நெடுந்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.;

Update:2023-07-25 07:05 IST

இலங்கை,

தமிழகத்தை சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதுவரை எந்தவித பயனும் இல்லை. ஆனாலும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் மட்டும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், இலங்கை நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்