கல்லணை அருகே புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி

கல்லணை அருகே புனித அந்தோணியார் ஆலய தேர்பவனி விமர்சையாக நடைபெற்றது.

Update: 2022-05-26 02:39 GMT

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள சுக்காம்பார் புனித அந்தோணியார் ஆண்டு திருவிழா கடந்த 16-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் நேற்று மாலை நடந்த திருப்பலியில் சுக்காம்பார் பங்கு தந்தை மரியதாஸ், பூண்டி மாதா பேராலய உதவி அதிபர் ரூபன் அந்தோணிராஜ் , பூண்டிமாதா பேராலய உதவிபங்குதந்தை ஜான்சன், திருச்சி கே.கே.நகர் பங்கு தந்தை ஆரோக்கியசாமி, திருச்சி செம்பட்டு பங்கு தந்தை செபாஸ்டீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருப்பலிக்கு பின்னர் வண்ணமயமான மின் விளக்கு மற்றும் மல்லிகை மலர் அலங்காரத்தில் புனித அந்தோணியார் சுரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது. சிறப்பு வாணவேடிக்கை நடந்தது. திருவிழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்