வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பில் பங்குனி பொங்கலை முன்னிட்டு பி.ஆர்.சி. கபடி குழு சார்பாக மாபெரும் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டியில் விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இதில் ராஜபாளையம் போலீஸ் அணி முதல் பரிசான ரூ. 25 ஆயிரம் மற்றும் கோப்பையையும், திருச்சி சமயபுரம் கபடி குழு 2-வது பரிசான ரூ. 20 ஆயிரம் மற்றும் கோப்பையையும், சங்கிலி நினைவு கபடி குழு கொத்தங்குளம் 3-வது பரிசு ரூ. 10 ஆயிரம் மற்றும் கோப்பையையும், கலசலிங்கம் பல்கலைக்கழகம் 4-வது பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பையையும் தட்டிச்சென்றனர்.