வீட்டில் பணம் திருட்டு
திருக்குறுங்குடியில் வீட்டில் பணம் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
ஏர்வாடி:
திருக்குறுங்குடி மேலநம்பி தோப்பை சேர்ந்தவர் ரவி (வயது 52). இவரது வீட்டு கார் செட்டில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியில் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான செல்வலிங்கம் ஈடுபட்டிருந்தார்.
சம்பவத்தன்று ரவி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் வள்ளியூருக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட செல்வலிங்கம் வீட்டுக்குள் புகுந்து, அங்கிருந்த ரூ.26 ஆயிரம், மடிக்கணினியை திருடிச் சென்றார். மேலும் வீட்டில் இருந்த டி.வி.யை சேதப்படுத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுபற்றி ரவி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வலிங்கத்தை தேடிவருகிறார்கள்.