வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி: கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிரொலி காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.;

Update:2022-09-11 22:35 IST

கடலூர் முதுநகர், 

ஒடிசா மாநில பகுதியை ஒட்டியுள்ள வங்கக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு 20 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடக்கு, வடமேற்கு திசையில் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று காலை ஏற்றப்பட்டது. 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தூரத்தில் புயல் உருவாகி இருப்பதை குறிப்பதாகும்.

Tags:    

மேலும் செய்திகள்