எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update:2023-03-21 00:15 IST

கூடலூர், 

கூடலூர் தாலுகா பாடந்துறை பகுதிகளில் நீண்ட காலமாக மக்கள் வசிக்கும் சாலைகள் சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பாடந்துறை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தலைவர் தாரிக் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கிளை செயலாளர் ஷிஹாப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் ரபிக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்