சேலத்தில் மாயமான அரசு பள்ளி மாணவர் மீட்பு

Update: 2023-03-12 19:00 GMT

சேலம் நெத்திமேட்டை சேர்ந்தவர் மகபூப்பாஷா. இவருடைய மகன் நவாஸ் பாஷா (வயது 11). இவன் குகை அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த 10-ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவன் நவாஸ் பாஷா, பின்னர் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் சென்று தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதற்கிடையே புதுச்சத்திரம் அருகே உள்ள களங்காணி புறவழிச்சாலையில் பள்ளி சீருடையில் மாணவர் ஒருவர் சைக்கிளுடன் அமர்ந்திருந்ததை அவ்வழியாக சென்ற சமூக ஆர்வலர்கள் பார்த்து விசாரணை நடத்தினர். அதில் சேலத்தில் இருந்து திருச்சிக்கு சைக்கிளில் செல்வதாகவும், பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் யாருடைய செல்போன் நம்பரும் தெரியவில்லை என்றும், திருச்சி செல்ல உதவி செய்யும்படி கூறினான்.

ஆனால் சேலம் குகை மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் விவரம் அறிந்த சமூக ஆர்வலர்கள், சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாயமான மாணவர், களங்காணி பகுதியில் பத்திரமாக இருப்பதை அறிந்து அங்கு வந்து பெற்றோர் மாணவர் நவாஸ் பாஷாவை மீட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்