பூஜை அறையில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை

ரத்தினபுரி பகுதியில் பூஜை அறையில் தூக்குபோட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.;

Update:2023-10-06 03:45 IST

கணபதி

கோவை ரத்தினபுரி அருகே உள்ள பழனிசாமிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சியாமளா (வயது 15). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி திடீரென வாழ்க்கையில் விரக்தி அடைந்து பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்