கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை

கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் விஷம் குடித்து மாணவர் தற்கொலை.;

Update:2022-12-06 04:25 IST

கோவை,

கோவை மாவட்டம் இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவரது கணவர் இறந்துவிட்டார். இவரது மகன் முருகேஷ் (வயது20). இவர் ஈரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்தார். இந்தநிலையில் வருகிற 10-ந் தேதிக்குள் கல்லூரி கட்டணம் ரூ.30 ஆயிரம் கட்ட வேண்டி இருந்தது.

எஸ்டேட்டில் தேயிலை தோட்ட தொழிலை செய்து வரும் தனது தாயால் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என்று கூறி வந்ததோடு மிகுந்த மன வருத்தத்தில் இருந்த முருகேஷ் திடீரென விஷம் குடித்துவிட்டார். இதற்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்த முருகேஷ் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்