அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணா

துர்நாற்றம் வீசுவதால் அரியலூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-14 19:30 GMT

அரியலூர் அரசு கலைக்கல்லூரி அருகே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிலையத்தில் கழிவுகளை சுத்திகரிக்கும்போது அதிகளவில் துர்நாற்றம் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால் அருகே அமைந்துள்ள கலைக்கல்லூரியில் படிக்கும் மாணவ-மாணவிகள் அவதியடைந்தனர். மேலும் ஒரு சிலருக்கு வாந்தி-மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகளும் ஏற்பட்டன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் நேற்று முன்தினம் கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்