மாணவர்கள் பேரணி

செங்கோட்டையில் மாணவர்கள் பேரணி நடந்தது.;

Update:2022-08-11 21:21 IST

செங்கோட்டை:

செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முருகேசன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர்கள் சமுத்திரக்கனி, சிவசுப்பிரமணியன், சுடர்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் மருந்தாளுனர் அப்பாஸ்மீரான், மருத்துவமனை ஆய்வக நுட்புனர் ஹரிஹரநாராயணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முடிவில் உதவி தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்