வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.;
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டம் நடந்தது.
ஆய்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பாக அரசியல் கட்சிகள் பிரமுகர்கள் மற்றும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஷ்ராம் தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 26, 27-ந் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி பயன் பெற வேண்டும். அலுவலர்கள் சிறப்பு திருத்த முகாம்கள் பற்றிய விழிப்புணர்வினை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி சிறப்பு சுருக்க திருத்தப் பணியினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என பார்வையாளர் தெரிவித்தார்.
கலந்துரையாடல்
பின்னர் அரசியல் கட்சி பிரமுகர்களுடன் கலந்துரையாடினார். அடுத்த முகாமிற்கு என்ன பிரச்சனைகள் உள்ளன என்பதை அறிந்த பின்னர் கருத்துக்களை தெரிவிக்கின்றோம். வாக்காளர் பட்டியல் எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை சரிப்பார்த்து கருத்துக்கள் தெரிவிக்கின்றோம் என அரசியல் கட்சி பிரமுகர்கள் கூறினர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஸ்வரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வருவாய் கோட்டாட்சியர்கள் வினோத்குமார், பாத்திமா, அனைத்து தாசில்தார்கள், நகராட்சி ஆணையாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.