திடீர் உடல்நல குறைவு: ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை

திடீர் உடல்நல குறைவு: ஜி.கே.மணி எம்.எல்.ஏ.வுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டாக்டர் ராமதாஸ் நலம் விசாரித்தனர்.;

Update:2022-11-12 00:17 IST

சேலம்,

பா.ம.க. கவுரவ தலைவரும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியின் எம்.எல்.ஏ.வுமான ஜி.கே.மணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஜி.கே.மணியிடம் அவரது உடல்நலம் குறித்து நலம் விசாரித்தார்.

இதுதொடர்பாக சேலம் காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எங்களது ஆஸ்பத்திரியில் உடல்நல குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இரைப்பை குடல் அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதற்காக டாக்டர்கள் குழுவினர் த் அடைந்து வருகிறார். இதனால் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்