தர்மபுரி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை;

Update:2022-10-19 00:15 IST

தர்மபுரி அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கல்லூரி மாணவி

தர்மபுரி அருகே உள்ள ஏ.கொல்லஅள்ளி புதூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் அர்ச்சனா (வயது 18). இவர் தர்மபுரி அருகே உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அர்ச்சனா தனது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அர்ச்சனாவை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விசாரணை

அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் இறந்து விட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்