ஊரகவளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு

வடபூண்டி ஊராட்சியில் ஊரகவளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் ஆய்வு

Update: 2023-01-13 18:45 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே வடபூண்டி ஊராட்சி சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டது. இதையொட்டி ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் இயக்குனர் சுமதி நேற்று வடபூண்டி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம், தனி நபர் இல்ல கழிவறை மற்றும் உறிஞ்சி குழி, மக்கும் குப்பை, மக்காத குப்பை ஆகியவற்றை தரம் பிரித்து வாங்கும் முறை உள்ளிட்ட கிராமத்தின் முழு தூய்மை மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து தனிநபர் வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்புகளில் முறையாக மூடி அமைக்கப்பட வேண்டும், குளோரினேசன் செய்யப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து இதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்த அவர் மாணவர்களின் கல்வித்தரம், உணவு குறித்து கேட்டறிந்தார். அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்(ஊராட்சிகள்) மணி, உதவி இயக்குனர் ரத்தினமாலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சீனிவாசன், செந்தில் முருகன், உதவி பொறியாளர்கள் ஜெயப்பிரகாஷ், கோபி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர் கொடியரசி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்