தமிழ் இலக்கிய மன்ற நிகழ்ச்சி

தமிழ் இலக்கிய மன்ற நிகழ்ச்சி;

Update:2023-08-28 02:15 IST

பொள்ளாச்சி

ஆனைமலை அருகே உள்ள பெத்தநாயக்கனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றம் மற்றும் திறம்பட கேள் என்ற நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கினார்.

இதில் குழந்தைகளின் அடிப்படை சட்டங்கள் குறித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகள் நல சட்டங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது. இது தவிர குழந்தைகள் பாதுகாப்பிற்கான அவசர உதவி தொலைபேசி எண் 1098 குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் விளக்கப்பட்டது. பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்