எலிமருந்தை தின்று வாலிபர் சாவு

Update:2023-07-16 00:09 IST

அன்னதானப்பட்டி

சேலம் தாதகாப்பட்டி சஞ்சீவிராயன்பேட்டை பார்க் தெருவைச் சேர்ந்த ரவி மகன் கிருஷ்ணராஜ் (வயது 28). இன்னும் திருமணம் ஆகவில்லை. சீலநாயக்கன்பட்டியில் உள்ள மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வந்தார். கிருஷ்ணராஜ், குடும்பத்தினர் ஒரு பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்