பள்ளிபாளையம்:
பள்ளிபாளையத்தில் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று காலை காவிரி ஆற்றில் இருந்து சிறுமிகள் 7 பேரை கன்னிமார்களாக பாவித்து அழைத்து அவர்களை தீர்த்தக்குடங்களுடன் ஊர்வலமாக அழைத்து வந்தனர். இந்த ஊர்வலம் அம்மன் கோவில் தெரு, ராஜவீதி, பஸ் நிலைய தெரு வழியாக மீண்டும் சாரங்கபாணி தெரு சென்று கோவிலை அடைந்தது. அப்போது கன்னிமார்களுக்கு பெண்கள் தீர்த்தம் கொண்டு வந்து ஊற்றினர். இதையடுத்து கோவிலை அடைந்த கன்னிமார்களுக்கு ஓங்காளியம்மன் முன்பு அர்ச்சனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.