திருச்செங்கோட்டில் ரூ.38½ லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்

திருச்செங்கோட்டில் ரூ.38½ லட்சத்துக்கு பருத்தி, எள் ஏலம்;

Update:2022-07-19 21:38 IST

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகமான திருச்செங்கோட்டில் நேற்று பருத்தி, எள் ஏலம் நடந்தது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.8,399 முதல் ரூ.9,499 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ரூ.8,606 முதல் ரூ.9,389 வரை விற்பனை ஆனது. மொத்த 1,013 மூட்டை பருத்தி ரூ.35 லட்சத்திற்கு ஏலம் போனது.

இதேபோல் எள் ஏலத்தில் கருப்பு எள் கிலோ ரூ.101 முதல் ரூ.106 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.105 முதல் ரூ.116 வரையும், வெள்ளை எள் கிலோ ரூ.102 முதல் ரூ.122. வரையும் விற்பனை ஆனது. மொத்தம் 50 மூட்டை எள் ரூ.3.50 லட்சத்திற்கு ஏலம் போனது.

மொத்தம் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.38 லட்சத்து 50 ஆயிரத்துக்கு பருத்தி, எள் விற்பனை ஆனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்