மாடித்தோட்ட செயல் விளக்க பயிற்சி முகாம்
மாடித்தோட்ட செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது.;
சாயல்குடி,
சாயல்குடி சமுதாய கூடத்தில் கடலாடி வட்டார தோட்டக்கலை துறை சார்பாக மாடித்தோட்ட செயல் விளக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், இளநிலை உதவியாளர் முத்துராமலிங்கம், பேரூராட்சி துணை தலைவர் மணிமேகலை பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோட்டக்கலை உதவி இயக்குனர் செல்வராஜன், இயற்கை விவசாயி நாகலிங்கம் ஆகியோர் மாடித்தோட்டம் குறித்து செயல் விளக்கம் அளித்தனர்.