மண் கடத்திய சிறுவன் கைது

மண் கடத்திய சிறுவன் கைது செய்யப்பட்டான்.;

Update:2023-08-18 01:46 IST

களக்காடு:

களக்காடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் ஜெ.ஜெ.நகர் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த குளத்து மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டனர். இதில் அரசு அனுமதி இன்றி குளத்து மண்ணை திருடி விற்பனை செய்ய கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், டிராக்டரை ஓட்டி வந்த 16 வயது சிறுவனை கைது செய்தனர்.

இதேபோல் களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் மற்றும் போலீசார் மேலவடகரை குளத்தில் ரோந்து சென்றனர். அப்போது குளத்தில் ஒரு கும்பல் டிராக்டரில் மண் கடத்திக் கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்