செல்போனில் பேசி கொண்டே அரசு பஸ்சை ஓட்டிய டிரைவர்
செல்போனில் பேசி கொண்டே அரசு பஸ்சை டிரைவர் அரசு பஸ்சை ஓட்டினார்;
மானாமதுரை
ராமேசுவரத்தில் இருந்து மானாமதுரை நோக்கி நேற்று அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் ஒரு கையில் செல்போனில் பேசிக்கொண்டும் மறுகையில் பஸ்சை இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணி ஒருவர் இதை வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். எனவே ஆபத்தான முறையில் பஸ்களை ஓட்டும் இது போன்ற டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.