கிணற்றில் தவறி விழுந்த விவசாயி

வடமதுரை அருகே கிணற்றில் தவறி விவசாயி விழுந்தார்.

Update: 2023-10-24 19:45 GMT

வடமதுரை அருகே உள்ள மொட்டனம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி (வயது 45). விவசாயி. இவர் அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் சுமார் 50 அடி ஆழமுடைய உறை கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் இருந்தது. நேற்று முன்தினம் கிணற்றின் அருகே பாண்டி நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. கிணற்றில் சுமார் 3 அடி அளவுக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் பாண்டி காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதுகுறித்து பாண்டியின் உறவினர்கள் வேடசந்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையில் வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி வலை மூலம் பாண்டியை உயிருடன் மீட்டு கிணற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்