கோவை சிவானந்தா காலனி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது23).இவர் காந்திபுரம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவதர் காந்திபுரம் பாரதியார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த நபர் ஒருவர் அஜித்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 1,850 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.இது குறித்த புகாரின் பேரில், காட்டூர்போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அஜித்குமாரிடம் கத்தியை காட்டி பணம் பறித்தது ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மகன் முருகேசன் (31) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிடிபட்ட முருகேசன் மீது ஏற்கனவே அனுப்பர்பாளையம், அம்மாபேட்டை மற்றும் கோவை காட்டூர் போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.