மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update:2023-03-08 23:45 IST

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், ரவி, கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், டி.அம்பிகா, மாவட்ட குழு பி.பத்மாவதி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டிப்பது மற்றும் ஜெயங்கொண்டம் வாரச்சந்தை, நகராட்சி அலுவலகம், பூக்கடை சந்து உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்வதை போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனை தடுக்க வேண்டும். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு 2 ஏக்கர் நிலம் கூட இல்லை. எனவே மற்றொரு இடத்தை தேர்வு செய்து மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்